நெய்வேலி கெங்கைகொண்டான் பேரூராட்சியில் கடலூர்- விருத்தாசலம் சாலையில் அதிகளவு மாடுகள் சுற்றித்திரிகின்றன. இவை இரவு நேரத்தில் அங்கேயே படுத்து கிடப்பதால் அவ்வழியாக செல்லும் வாகனஓட்டிகள் விபத்துகளில் சிக்கிக்கொள்ளும் நிலை உருவாகியுள்ளது. எனவே சாலையில் சுற்றித்திரியும் மாடுகளை பிடித்து அப்புறப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டியது அவசியமாகும்.