விக்கிரவாண்டி தாலுகாவில் உள்ள செம்மேடு, சித்தேரி ஆகிய பகுதிகளில் உள்ள பஸ் நிறுத்தங்களில் பயணிகள் நிழற்குடை அமைக்கப்படவில்லை. இதனால் அங்கு பஸ்சுக்காக வெயிலிலும், மழையிலும் பொதுமக்கள் கால்கடுக்க காத்திருந்து பஸ் ஏறிச்செல்லும் அவல நிலை உள்ளது. இதை தவிர்க்க மேற்கண்ட இடங்களில் பயணிகள் நிழற்குடை அமைக்க வேண்டியது அவசியமாகும்.