கரூர் மாவட்டம் நொய்யல் குறுக்கு சாலை பகுதியில் ஏராளமான வாகனங்கள் அதிவேகமாக செல்வதினால் இப்பகுதியில் அடிக்கடி விபத்து ஏற்படுகிறது. எனவே இதனை தடுக்கும் வகையில் இப்பகுதியில் வேகத்தடை அமைக்க வேண்டும் என தினத்தந்தி புகார் பெட்டியில் செய்தி வெளியிடப்பட்டது. இதனை அறிந்த சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுத்து நொய்யல் குறுக்கு சாலையில் ஐ.ஓ.பி. வங்கிக்கு எதிரில் புதிய வேகத்தடை அமைத்து உள்ளன. எனவே செய்தி வெளியிட்ட தினத்தந்தி புகார் பெட்டிக்கும், நடவடிக்கை எடுத்த அதிகாரிகளுக்கும் இப்பகுதி மக்கள் நன்றி தெரிவித்தனர்.