அரியலூர் மாவட்டம் செந்துறையில் இருந்து ஆர்.எஸ். மாத்தூர் செல்லும் சாலையில் இலைக்கடம்பூர் கிராமத்திற்கும், பெரியாக்குறிச்சி கிராமத்துக்கும் இடையே உள்ள சாலையின் இருபுறமும் கருவேல மரங்கள் அடர்ந்து வளர்ந்துள்ளன. இதனால் ஒரே நேரத்தில் 2 நான்கு சக்கர வாகனங்கள் சாலையை கடக்கும்போது சாலையோரத்தில் செல்லும் இருசக்கர வாகன ஓட்டிகள் கருவேல முட்களில் மோதி காயம் அடைந்து வருகின்றனர். மேலும் இரவு நேரத்தில் செல்லும் இருசக்கர வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்கும் அபாயம் உள்ளது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.