கடமலைக்குண்டு வழியாக பாலூத்து கிராமத்துக்கு இயக்கப்பட்ட அரசு பஸ், கடந்த 3 ஆண்டுகளாக நிறுத்தப்பட்டுள்ளது. இதனால் பாலூத்துவில் இருந்து 3 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள பள்ளிக்கு செல்லும் மாணவ-மாணவிகள் நடந்து செல்லும் அவல நிலை உள்ளது. எனவே பாலூத்து கிராமத்துக்கு மீண்டும் அரசு பஸ்சை இயக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?.