கோத்தகிரி சுற்றுவட்டார பகுதிகளில் சாலையோரங்களில் உள்ள அபாயகரமான மரங்களை வெட்டி அகற்றும் பணி நடைபெறுகிறது. வெட்டப்பட்ட மரங்களை கொண்டு செல்ல லாரிகளை போக்குவரத்துக்கு இடையூறாக நிறுத்தி ஏற்றி வருவதால் வாகன ஓட்டிகளுக்கு சிரமம் ஏற்படுகிறது. எனவே போக்குவரத்துக்கு இடையூறின்றி லாரிகளை நிறுத்தி வெட்டப்பட்ட மரங்களை ஏற்றி செல்ல போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டும்.