நிழற்கூடம் அமைக்கப்படுமா?

Update: 2025-01-19 17:12 GMT

ராசிபுரம் தாலுகா ஓஸ்வதாபுரம் கிராமம் அருகே முயல்காடு பஸ் நிறுத்தம் உள்ளது. இந்த பஸ் நிறுத்தத்தில் 50-க்கும் மேற்பட்ட குழந்தைகள் தினந்தோறும் பள்ளி செல்ல பஸ் ஏறுவதற்காக வருகின்றனர். ஆனால் இந்த பஸ் நிறுத்தத்தில் இதுவரை நிழற்கூடம் அமைக்கப்படவில்லை. இதனால் பள்ளி செல்லும் குழந்தைகள், பயணிகள் மழை காலங்களிலும், வெயில் காலங்களிலும் சிரமம் அடைகின்றனர். எனவே இந்த பகுதியில் மாணவர்கள், பயணிகளின் நலன் கருதி நிழற்கூடம் அமைத்து தர அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?.

மேலும் செய்திகள்