சேத்தியாத்தோப்பில் இருந்து லால்பேட்டை, கந்தகுமரன் ஏரிக்கரை சாலை வழியாக காட்டுமன்னார்கோவிலுக்கு காலை மற்றும் மாலை வேளைகளில் ஒரே ஒரு பஸ் மட்டுமே வந்து செல்கிறது. இதனால் பஸ்சில் கூட்டநெரிசல் ஏற்படுவதால் பயணிகள், பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகள் பெரும் சிரமம் அடைந்து வருகின்றனர். இதை தவிர்க்க மேற்கண்ட பகுதி வழியாக கூடுதலாக பஸ்கள் இயக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டியது அவசியம்.