அரியலூர் மாவட்டம், ஜெயங்கொண்டம் நகரில் செந்துறை சாலை, திருச்சி சாலை பிரியும் இடத்தில் போக்குவரத்து சிக்னல் உள்ளது. இந்த சிக்னல் எந்த பயன்பாடும் இல்லாமல் காட்சி பொருளாக மட்டுமே உள்ளது. மேலும் அந்த சிக்னல் கம்பதை சுற்றி பதாகைகள் அதிகளவில் உள்ளது. எனவே அந்த சிக்னலை பயன்பாட்டிற்கு கொண்டு சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டு கொள்கிறோம்.