சிதிலமடைந்த பாலம்

Update: 2025-01-12 17:10 GMT

திருச்சி மாவட்டம் திருவெறும்பூர் ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட பழங்கனாங்குடி கிராமத்தில் உள்ள கட்டளை வாய்க்காலின் குறுக்கே பாலம் அமைக்கப்பட்டுள்ளது. இந்த பாலம் அமைக்கப்பட்டு சுமார் 50 ஆண்டுகளுக்கு மேல் ஆவதால் தற்போது சிதிலமடைந்து ஆபத்தான நிலையில் காணப்படுகிறது. மேலும் இந்த பாலம் குறுகளாக உள்ளதால் அடிக்கடி விபத்துகள் ஏற்பட்டு வருகிறது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.  

மேலும் செய்திகள்