அந்தியூர் அருகே உள்ள புதுமேட்டூர் பஸ் நிறுத்தம் வழியாக 20பி என்ற அரசு பஸ் இயக்கப்படுகிறது. ஆனால் இங்கு பஸ் நின்று பயணிகளை ஏற்றி செல்வதில்லை. இதனால் மாணவ-மாணவிகள் உரிய நேரத்தில் பள்ளிக்கூடமும், பொதுமக்கள் வேலைக்கும் செல்ல முடியாமல் சிரமப்படுகின்றனர். புதுமேட்டூர் பஸ் நிறுத்தத்தில் பஸ் நின்று செல்ல அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க முன்வருவார்களா?