அரியலூர் மாவட்டம், ஜெயங்கொண்டம் நகரில் செந்துறை, திருச்சி சாலை பிரியும் இடத்தில் போக்குவரத்து சிக்னல் கம்பம் அமைக்கப்பட்டு உள்ளது. இந்த சிக்னல் கம்பமானது செயல்பாடு இன்றி உள்ளதால், இரவு நேரத்தில் இந்த வழியாக செல்லும் வாகனங்கள் விபத்தில் சிக்கும் அபாயம் உள்ளது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுத்து பயனற்று உள்ள போக்குவரத்து சிக்னலை செயல்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.