அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் தேவாங்க முதலியார் தெரு உய்யகொண்டான் ஏரி அருகே சாலையின் குறுக்கே பாலம் அமைக்கப்பட்டுள்ளது. இந்த பாலத்தின் தடுப்பு கட்டிகள் அமைக்கப்படாமல் உள்ளதால் இரவு நேரத்தில் இந்த சாலை வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்கும் அபாயம் உள்ளது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுத்து இந்த பாலத்தின் இருபுறமும் தடுப்பு கட்டைகள் அமைக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.