இரும்பு தடுப்பால் விபத்து அபாயம்

Update: 2025-01-05 11:51 GMT

புதுக்கோட்டை மாவட்டம், மேல்மங்களம் பஸ் நிறுத்த நிழற்குடை அருகில் சாலையில் இரும்பு தடுப்புகள் அமைக்கப்பட்டு உள்ளன. இது குறித்து வாகன ஓட்டிகள் முன்கூட்டியே எச்சரிக்கைக்கும் வகையில் எந்த ஒரு எச்சரிக்கை பலகையும் அமைக்கப்படவில்லை. அதே சமயம் வாகன ஓட்டிகளை ஒரு குறிப்பிட்ட தொலைவில் எச்சரிக்கை செய்ய சமிக்கை விளக்குகளும் பொருத்தபடவில்லை. இதனால் கவனக்குறைவாக செல்லும் வாகன ஓட்டிகள் இந்த இரும்பு தடுப்பில் மோதி விபத்தில் சிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

மேலும் செய்திகள்

பஸ் வசதி