நாகர்கோவில் மீனாட்சிபுரத்தில் அண்ணா பஸ்நிலையம் உள்ளது. இந்த நிலையத்தில் மாவட்டத்தின் பல கிராமங்களுக்கு பஸ்கள் இயக்கப்பட்டு வருகிறது. நிலையத்தில் இருந்து பஸ்கள் மீனாட்சிபுரம் வழியாக வெளியே செல்லும் சாலை உள்ளது. இந்த சாலையின் ஒரு பகுதியில் மது குடித்து விட்டு போதையில் சிலர் படுத்தி கிடக்கின்றனர். இதனால், பாதசாரிகளுக்கு பெரும் சிரமம் ஏற்படுவதுடன், பஸ் டிரைவர்களுக்கும் இடையூறு ஏற்பட்டு வருகிறது. எனவே, சாலையில் மதுபோதையில் போக்குவரத்துக்கு இடையூறாக படுத்து கிடக்கும் ஆசாமிகள் மீது சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-பெட்ரோமின், தென்தாமரைக்குளம்.