பயணிகள் அவதி

Update: 2024-12-29 08:56 GMT

பள்ளி கல்லூரி மாணவ-மாணவிகள், பொதுமக்கள் பயன்பாட்டிற்காக தினமும் காலை 6.40 மணிக்கு நாகர்கோவில் அண்ணா பஸ்நிலையத்தில் இருந்து செட்டிகுளம், புன்னைநகர், பருத்திவிளை, ஆடராவிளை வழியாக ஈத்தாமொழிக்கு தடம்எண் 31 ‘ஏ’-வும், ஈத்தாமொழியில் 7.40 மணிக்கு புறப்பட்டு தர்மபுரம், ஜோன்ஸ்புரம் மேலமாவிளை, ஆடராவிளை, வைராகுடி, கோணம் கலைக்கல்லூரி, செட்டிகுளம், வடசேரி, பண்டாரத்தோப்புக்கு இயக்கப்பட்டு வந்தது. இந்த பஸ் கொரோனா காலத்துக்கு பிறகு இயக்கப்படவில்லை. இதனால், பள்ளி-கல்லூரி மாணவர்கள், பொதுமக்கள் பெரும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். எனவே, பொதுமக்கள் நலன்கருதி மீண்டும் அந்த பஸ்சை இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.


மேலும் செய்திகள்

பஸ் வசதி