கோத்தகிரி பகுதியில் கேபிள் பதிக்கவும், குடிநீர் குழாய் பதிக்கவும் சாலைகளில் குழிகள் தோண்டப்படுகின்றன. ஆனால் பணிகள் முடிந்த பிறகு அவை முறையாக மூடப்படுவது இல்லை. இதனால் சாலைகளில் மேடு, பள்ளங்கள் ஏற்படுகின்றன. அதில் செல்லும் வாகனங்கள் நிலைதடுமாறி விபத்தில் சிக்கி வருகின்றன. இதனால் வாகன ஓட்டிகள் கடும் அவதிப்படுகிறார்கள். எனவே மேடு, பள்ளமாக கிடக்கும் சாலைகளை சீரமைக்க வேண்டும். மேலும் குழிகள் தோண்டினால் அதை முறையாக மூட அதிகாரிகள் முன்வர வேண்டும்.