திருச்சி மாவட்டம், மண்ணச்சநல்லூர் திருவெள்ளறையில் புண்டரீ காட்ச பெருமாள் கோவில் உள்ளது. இந்த கோவிலுக்கு வாரந்தோறும் சனிக்கிழமை மற்றும் விழா நாட்களில் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து செல்கின்றனர். இந்த கோவிலுக்கு வரும் குறிப்பிட்ட நகர பஸ்களை தவிர மற்றவை நுழைவு வாயிலேயே பக்தர்களை இறக்கிவிட்டு செல்கின்றனர். இதனால் நுழைவு வாயிலிலிருந்து கோவிலுக்கு செல்ல பக்தர்கள் அதிக தூரம் நடந்து செல்ல வேண்டியுள்ளது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து அதிகளவில் நகர பஸ்களை இயக்க வேண்டும் என கேட்டுக் கொள்கிறோம்.