பராமரிப்பில்லாத பயணிகள் நிழற்குடை

Update: 2024-12-15 17:43 GMT
சங்கராபுரம் பூட்டை சாலையில் அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி அருகில் உள்ள பயணிகள் நிழற்குடையில் இரவு நேரத்தில் சமூகவிரோதிகள் அமர்ந்து மது குடித்துவிட்டு காலி மது பாட்டில்கள், தண்ணீர் பாட்டில்கள் மற்றும் புகையிலை பொருட்களை அங்கேயே வீசிவிட்டு செல்கின்றனர். இதனால் பகலில் அங்கு பஸ்சுக்காக காத்திருக்க பயணிகள் அச்சமடைந்து சாலையில் கால்கடுக்க நிற்க வேண்டிய அவல நிலை ஏற்பட்டு வருகிறது. இதை தவிர்க்க பயணிகள் நிழற்குடையை அதிகாரிகள் முறையாக பராமரிக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?

மேலும் செய்திகள்