வாகன ஓட்டிகள் சிரமம்

Update: 2024-12-15 16:48 GMT

வெண்ணந்தூர் அடுத்த வெள்ளைபிள்ளையார் கோவில் பகுதியில் புதிதாக பாலம் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. இதற்காக ஜல்லிக்கற்கள் கொட்டப்பட்டு உள்ளது. இதனால் வாகனங்கள் செல்லும் பொது அதிக அளவில் மண் தூசிகள் பறக்கிறது. வாகன ஓட்டிகள் பெரும் சிரமம் அடைந்து வருகின்றனர். மேலும் விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே பாலம் அமைக்கும் பணி ேமற்கொள்ளும் காலை, மாலை வேளைகளில் தண்ணீர் தெளித்து பணிகளை ேமற்கொள்ள ேவண்டும் என வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

-வேல், வெள்ளைபிள்ளையார் கோவில்.

மேலும் செய்திகள்