அந்தியூர்-கோபி இடையே இயக்கப்படும் அரசு டவுன் பஸ்கள் புதுமேட்டூர் பஸ் நிறுத்தத்தில் நிற்காமல் சற்று தொலைவில் சென்று நிற்கின்றது. இதனால் பயணிகள் ஓடிச்சென்று பஸ்சில் ஏறும் நிலை உள்ளது. எனவே பஸ் நிறுத்தத்தில் பஸ்களை நிறுத்த அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க முன்வர வேண்டும்.