சிக்னல் வசதி வேண்டும்

Update: 2024-12-15 14:01 GMT
திருச்சி மாவட்டம், மருங்காபுரி வட்டம் கல்லாமேட்டை திருச்சி-மதுரை தேசிய நெடுஞ்சாலையில் சிக்னல் வசதி இருந்தது. இதனால் கல்லாமேட்டை சேர்ந்த பொதுமக்கள் இரவு நேரங்களில் நெடுஞ்சாலையை கடக்க உதவியாக இருந்தது. தற்போது கடந்த ஒரு ஆண்டாக சிக்னல் இயக்கவில்லை. இதனால் இரவு நேரங்களில் சாலையை கடப்பவர்கள் மிகவும் சிரமம் அடைந்து வருகின்றனர். மேலும் இந்த சாலை வழியாக வரும் அனைத்து வாகனங்கள் வேகமாக செல்கிறது. இதனால் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் சிக்னல் வசதி செய்து கொடுக்க வேண்டும் என கேட்டுக் கொள்கிறோம்.

மேலும் செய்திகள்