செங்கல்பட்டு மாவட்டம், வண்டலூரில் உயிரியல் பூங்கா உள்ளது. இந்த பூங்காவிற்கு தினமும் ஏராளமான பொதுமக்கள் வந்து செல்கின்றனர். இங்கிருந்து கேளம்பாக்கம் செல்ல பயணிகள் பஸ் மூலம் பயணம் செய்து வருகின்றனர். பூங்கா அருகே இதற்காக பஸ் நிறுத்தம் உள்ளது. ஆனால் பஸ் நிலையம் இல்லை. இதனால் பயணிகள் வெயில், மழையில் கால்கடுக்க காத்திருந்து பஸ் ஏறும் அவல நிலை உள்ளது. எனவே, பயணிகளின் நலன் கருதி பஸ் நிலையம் அமைக்க சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.