பந்தலூர் தாலுகாவிற்கு உட்பட்ட புஞ்சைவயல் விநாயகர் கோவிலில் இருந்து நெல்லியாளம் டேன்டீ வழியாக ஒளிமடா பகுதிக்கு நடைபாதை செல்கிறது. இந்த நடைபாதை மிகவும் உடைந்து குண்டும், குழியுமாக காணப்படுகிறது. இதனால் அந்த வழியாக செல்லும் பாதசாரிகள் தவறி விழுந்து காயம் அடைந்து வருகின்றனர். எனவே அந்த நடைபாதையை உடனடியாக சீரமைக்க சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.