திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி தாலுகாவில் நல்லூர் கிராமம் உள்ளது. இங்கிருந்து திருத்துறைப்பூண்டி,முத்துப்பேட்டைக்கு செல்ல சாளுவன் ஆற்றின் குறுக்கே பாலம் அமைக்கப்பட்டுள்ளது. இந்த பாலத்தின் வழியாக தினமும் நூற்றுக்கணக்கான வாகனங்கள் சென்று வருகின்றன. இந்த நிலையில் போக்குவரத்து முக்கியத்துவம் வாய்ந்த பாலத்தில் கனரக வாகனங்கள் நிறுத்தப்படுவது நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனால் அப்பகுதியில் அடிக்கடி போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் பாலத்தில் கனரக வாகனங்கள் நிறுத்தப்படுவதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.