விழுப்புரத்தில் இருந்து அத்தியூர் திருக்கை வரை போதிய பஸ் வசதி இல்லை. இதனால் பள்ளி, கல்லூரிகளை சேர்ந்த மாணவ, மாணவிகள், வியாபாரிகள், தொழிலாளர்கள் உள்ளிட்ட அனைத்து தரப்பு மக்களும் பெரும் சிரமமடைந்து வருகின்றனர். எனவே பொதுமக்களின் நலன்கருதி விழுப்புரம்-அத்தியூர் திருக்கை இடையே கூடுதல் பஸ் இயக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டியது அவசியமாகும்.