சேந்தமங்கலம் பெரிய மாரியம்மன் கோவில் நுழைவாயில் அருகில் உள்ள பிரதான சாலையில் விளம்பர பேனர் வைக்கப்பட்டுள்ளது. தீபாவளி பண்டிகைக்காக வைக்கப்பட்ட இந்த பேனர் தற்போது சேதமடைந்து எப்போது வேண்டுமானாலும் கீழே விழும் நிலையில் உள்ளது. எனவே அசம்பாவித சம்பவம் ஏதும் நடைபெறும் முன்பாக அதிகாரிகள் பேனரை அகற்றுவார்களா?
-புகழேந்தி, சேந்தமங்கலம்.