திண்டுக்கல்லை அடுத்த கே.சி.பட்டி, ஆடலூர் சாலையில் சோலைக்காடு பிரிவில் பயணிகள் நிழற்குடை உள்ளது. இந்த நிழற்குடையை சுற்றி செடி-கொடிகள் வளர்ந்து புதர் மண்டி இருப்பதால் நிழற்குடை இருப்பதே தெரியவில்லை. இதனால் நிழற்குடையை பயன்படுத்த பயணிகள் அச்சப்படுகின்றனர். எனவே நிழற்குடையை சுற்றி வளர்ந்துள்ள செடி, கொடிகளை விரைவாக அகற்ற அதிகாரிகள் முன்வர வேண்டும்.