ராமநாதபுரம் மாவட்டம் பனைக்குளம் வழியாக அழகன்குளத்திற்கு புதிய டவுன் பஸ் இயக்கப்பட்டது. தற்போது அந்த புதிய பஸ் கடந்த சில நாட்களாக வரவில்லை. அதற்கு பதிலாக சேதமடைந்த நிலையில் ஒரு பஸ் இயக்கப்படுகிறது. இதனால் பயணிகள் அவதியடையும் நிலை ஏற்பட்டுள்ளது. எனவே மீண்டும் புதிய டவுன் பஸ்சை இயக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.