கடலூர் செம்மண்டலத்தில் பேருந்து நிறுத்தத்தில் பயணிகள் நிழற்குடை அமைக்கப்படவில்லை. இதனால் நூற்றுக்கணக்கான பள்ளி, கல்லூரி மாணவா்கள், பொதுமக்கள் உள்ளிட்ட அனைத்து தரப்பு மக்களும் தினமும் வெயிலிலும் மழையிலும் கால்கடுக்க நின்று பஸ் ஏறிச் செல்கின்றனர். எனவே பயணிகள் நலன் கருதி பயணிகள் நிழற்குடை அமைக்க வேண்டியது அவசியம்.