விபத்து அபாயம்

Update: 2024-12-01 17:32 GMT

நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையம் காவிரி ஆற்றின் மீது இரண்டு பாலங்கள் உள்ளன. ஒன்று ஈரோடு செல்வதற்கும், மற்றொன்று ஈரோட்டில் இருந்து வருவதற்கும் உள்ளது. இந்த இரு பாலத்தின் ஓரங்களிலும் இருசக்கர வாகனத்தை நிறுத்தி விட்டு ஆபத்தை அறியாமல் பொதுமக்கள் செல்பி எடுத்து செல்கின்றனர். மேலும் சிலர் வாகனங்களை பாலத்தில் நிறுத்தி விட்டு மணி கணக்கில் பேசுகின்றனர். இதனால் விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே இந்த பகுதியில் போலீசார் தீவிர ரோந்து பணியில் ஈடுபட வேண்டும்.

-வினோத், நாமக்கல்.

மேலும் செய்திகள்

பஸ் வசதி