கூடலூர் நகராட்சி 5-வது வார்டு முனியாண்டி கோவில் தெரு சிவகாமி நகரில் புதிதாக தார்சாலை போடப்பட்டுள்ளது. இந்த சாலையில் வேகத்தடை இல்லாததால் அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் வேகமாக செல்கின்றனர். இதனால் அப்பகுதியில் வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்கிக்கொள்கின்றனர். எனவே வேகத்தடை அமைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.