ஈரோடு லக்காபுரம் அருகே புதுவலசுவில் பயணிகள் நிழற்குடை பயன்பாடின்றி கிடக்கிறது. செடி, கொடிகள் வளர்ந்து காணப்படுகிறது. இதனால் அந்த பகுதி மக்கள் பஸ் ஏற கால்கடுக்க நிற்க வேண்டிய நிலை உள்ளது. எனவே பயணிகள் நிழற்குடையை பராமரித்து பொதுமக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வர அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க முன்வர வேண்டும்.