கோபியில் இருந்து பாரியூர், அத்தாணி வழியாக அந்தியூர் செல்வதற்கு ஏ20 அரசு டவுன் பஸ் இயக்கப்பட்டு வந்தது. ஆனால் கொரோனாவுக்கு பிறகு இந்த பஸ் இயக்கப்படவில்லை. இதனால் இந்த பஸ்சில் தினமும் பயணம் செய்து வந்த பள்ளி, கல்லூரி மாணவர்கள், பயணிகள், கூலி வேலைக்கு செல்பவர்கள் கடும் அவதிப்படுகின்றனர். எனவே பயணிகளின் நலன்கருதி மீண்டும் ஏ20 டவுன் பஸ் இயக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.