பவானி-அந்தியூர் மெயின் ரோட்டில் வாய்க்கால்பாளையம் அருகே பெரியார் நகர் என்ற இடத்தில் 200 குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இங்கிருந்து வௌியூர்களுக்கு பள்ளிக்கூடம், கூலி வேலைக்கு செல்பவர்கள் ½ கி.மீ. தூரம் நடந்து சென்று பஸ் ஏறும் நிலை உள்ளது. எனவே இவர்களின் நலன் கருதி பெரியார் நகரில் டவுன் பஸ்கள் நின்று செல்ல சம்பந்தப்பட்ட அரசு அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க முன்வர வேண்டும்.