விருதுநகர் நகர் பகுதிகளில் தினசரி காலை மற்றும் மாலை நேரங்களில் போக்குவரத்து நெரிசல் அதிக அளவில் காணப்படுகிறது. இதனால் வாகன ஓட்டிகள் சிரமப்படுவதுடன், சிறு சிறு விபத்துகளும் நடக்கின்றன. பள்ளி, கல்லூரி மாணவர்கள் மற்றும் வேலைக்கு செல்வோர் குறித்த நேரத்திற்குள் செல்லமுடியாமல் சிரமப்படுகின்றனர். போக்குவரத்து நெரிசலை தடுக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?