ஊட்டிக்கு முக்கிய பிரமுகர்கள் கோத்தகிரி வழியாக வந்து செல்கின்றனர். சமீபத்தில் ஜனாதிபதி, கவர்னர் வந்து சென்றனர். அப்போது கோத்தகிரி பகுதியில் உள்ள சாலையில் அமைக்கப்பட்டு இருந்த வேகத்தடைகள் அகற்றப்பட்டன. ஆனால் மீண்டும் வேகத்தடைகள் அமைக்கப்படவில்லை. இதன் காரணமாக அந்த சாலையில் வாகனங்கள் அதிவேகத்தில் இயக்கப்படுகின்றன. இதனால் விபத்து அபாயம் நிலவுகிறது. எனவே அங்கு மீண்டும் வேகத்தடை அமைக்க அதிகாரிகள் முன்வர வேண்டும்.