மாடுகளால் போக்குவரத்திற்கு இடையூறு

Update: 2024-12-01 11:42 GMT

புதுக்கோட்டை மாவட்டம் திருவரங்குளம் கடைவீதியில் ஏராளமான மாடுகள் அங்கும் இங்கும் சுற்றித்திரிகின்றன. இவை ஒன்றுடன் ஒன்று சண்டையிட்டுக் கொண்டு திடீரென சாலையின் குறுக்கே ஓடுவதினால் வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்கும் அபாயம் உள்ளது. மேலும் மாடுகள் இரவு நேரத்தில் சாலைகளில் படுத்துக் கொள்வதினால் இரவு நேரத்தில் செல்லும் வாகன ஓட்டிகள் மாடுகளின் மீது தங்கள் வாகனத்தை விட்டு விபத்தில் சிக்கி வருகின்றனர். எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம். 

மேலும் செய்திகள்