கரூர்- திருச்சி சாலையில் அமைந்துள்ள புலியூர் பொதுமக்கள் அதிக அளவில் பல்வேறு பகுதிகளுக்கு செல்வதற்கு வந்து செல்லக்கூடிய பகுதியாகும். தரகம்பட்டி, வரவணை, காணியாளம்பட்டி, ஜெகதாபி, உப்பிடமங்கலம், சேங்கல் மற்றும் சுற்று பகுதியை சேர்ந்த பொதுமக்கள் திருச்சி, குளித்தலை, லாலாபேட்டை , மாயனூர் உள்ளிட்ட பகுதிகளுக்கு செல்வதற்கு புலியூருக்கு வந்தே பஸ் ஏறி செல்கின்றனர். இதனால் புலியூர் பஸ் நிறுத்த பகுதியில் அதிக அளவில் மக்கள் பஸ்காக காத்திருக்கின்றனர். அப்படி காத்திருக்கும் பயணிகள் நிழற்குடை வசதி இல்லாததால் வெயில், மழைக்காலங்களில் மிகுந்த சிரமப்படுகின்றனர். எனவே உரிய அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொண்டு புலியூரில் அதிக அளவில் பயணிகள் அமரும் வகையில் பயணிகள் நிழல் குடை அமைத்து தரவேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்.