நாமக்கல்லில் புதிய பஸ் நிலையம் பயன்பாட்டிற்கு வந்துள்ளதால் சேலம் மற்றும் கோட்டை சாலையில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. இதனால் பொதுமக்கள், மாணவ-மாணவிகள் சிரமம் அடைகின்றனர். எனவே போக்குவரத்து நெரிசலை தவிர்க்க கார்களை கோட்டை சாலை மற்றும் சேலம் சாலையில் இயக்காமல் பரமத்தி சாலை வழியாகவும், சேலத்தில் இருந்து வரும் கார்களை புறவழிச்சாலை வழியாக வள்ளிபுரம், பரமத்தி சாலை வழியாகவும் இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.