நாமக்கல்லில் இருந்து சேலத்திற்கு அரசு பஸ்களில் ரூ.45 கட்டணம் வசூலிக்கப்பட்டு வந்தது. இந்த கட்டணத்தை செலுத்தி பொதுமக்கள் பயணம் செய்து வந்தனர். ஆனால் புதிய பஸ்நிலையம் செயல்பாட்டுக்கு வந்தது முதல் பழைய பஸ்நிலையத்தில் இருந்து புதிய பஸ்நிலையத்திற்கு ரூ.7 செலுத்தி சென்று அங்கிருந்து தான் சேலத்திற்கு செல்ல வேண்டி உள்ளது. ஆனால் அங்கிருந்தும் ரூ.45 கட்டணம் வசூலிக்கிறார்கள். இதனால் கூடுதலாக ரூ.7 செலுத்த வேண்டி உள்ளது. எனவே அரசு போக்குவரத்து கழகம் சேலத்தில் இருந்து நாமக்கல் புதிய பஸ்நிலையத்திற்கான கட்டணத்தை குறைக்க வேண்டும்.