விருதுநகர் மாவட்டம் திருத்தங்கல் ரெயில் நிலையம் அருகே உள்ள பஸ் நிறுத்தம் பகுதியில் காலை மற்றும் மாலை நேரங்களில் போக்குவரத்து நெரிசல் அதிகரித்து காணப்படுகிறது. இதனால் அப்பகுதியை கடந்த செல்ல பொதுமக்கள், பெண்கள், பள்ளி மற்றும் கல்லூரி செல்லும் மாணவ-மாணவிகள் பெரிதும் சிரமமடைந்து வருகின்றனர். போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.