புதுக்கோட்டை மாவட்டம் ஆதனக்கோட்டையில் புதுகை- தஞ்சை தேசிய நெடுஞ்சாலையில் குப்பையன்பட்டி சம்பட்டிவிடுதி வழியாக ஆலங்குடி செல்லும் சாலையும், வத்தனாக்கோட்டை குன்றாண்டார்கோவில் வழியாக கீரனூர் செல்லும் சாலையும் சந்திக்கும் நால்ரோடு சாலை சந்திப்பு உள்ளது. இந்த தேசிய நெடுஞ்சாலையில் பள்ளி, கல்லூரி மாணவர்கள், இருசக்கர வாகனங்களில் செல்வோர், பாதசாரிகள் மீது வேகமாக செல்லும் வாகனங்கள் மோதி அடிக்கடி விபத்துகள் ஏற்பட்டு வருகிறது. இதனை தடுக்க உடனடியாக தஞ்சை- புதுகை தேசிய நெடுஞ்சாலையில் கீரனூர் சம்பட்டிவிடுதி நான்கு சாலை சந்திப்பில் இரும்பு தடுப்புகள் (பேரிகார்டு) வைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.