விழுப்புரம் புதிய பஸ் நிலையம் எதிரே சுதாகர் நகர், கணபதி நகர் செல்லும் சாலையில் பாதாள சாக்கடை திட்டத்திற்காக பள்ளங்கள் தோண்டப்பட்டது. பின்னர் அங்கு பணிகள் முடிந்ததும் அந்த பள்ளங்கள் மூடப்பட்ட நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு பெய்த மழையினால் அந்த பள்ளம் உள்வாங்கியது. இதனால் அங்கு விபத்து ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது. எனவே அந்த பள்ளங்களை உடனடியாக சரிசெய்து சாலையை சீரமைக்க வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.