சிக்னல் சரி செய்யப்படுமா?

Update: 2024-11-24 13:11 GMT

பெரம்பலூர் நகர பகுதியில் காமராஜர் வளைவு, ரோவர் வளைவு ஆகிய இடங்களில் போக்குவரத்து சிக்னல் அமைக்கப்பட்டு உள்ளது. இந்த சிக்னலில் எவ்வளவு நேரம் வாகன ஓட்டிகள் நிற்க வேண்டும் என நிமிடங்கள் ஓடும் திரை அமைக்கப்படாமல் உள்ளதால் வாகன ஓட்டிகள் சிக்னல் விழ எவ்வளவு நேரம் உள்ளது என்பது தெரியாமல் திடீரென செல்கின்றனர். இதனால் வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்கும் அபாயம் உள்ளது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட போக்குவரத்து துறை அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம். 

மேலும் செய்திகள்