அம்மாபேட்டையில் இருந்து அந்தியூர்-அத்தாணி செல்வதற்கு டவுன் பஸ்கள் வசதி இல்லை. அந்தியூர் செல்ல குறிப்பிட்ட நேரம் மட்டும் புறநகர் பஸ்கள் மேட்டூர்-அந்தியூர் இடையே இயக்கப்படுகின்றன. இதனால் பயணிகள் அம்மாபேட்டையில் இருந்து பவானி சென்று அங்கிருந்து அந்தியூருக்கு பஸ் மாறி செல்கின்றனர். எனவே அம்மாபேட்டையில் இருந்து பூதப்பாடி, பூனாச்சி, பட்லூர் நால்ரோடு, அந்தியூர் வழியாக அத்தாணிக்கு டவுன் பஸ்கள் இயக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க முன்வருவார்களா?