பஸ் இயக்கப்படுமா?

Update: 2024-11-17 15:22 GMT

அந்தியூரில் இருந்து பெருந்துறைக்கு பஸ் வசதிகள் இல்லை. இதனால் அந்தியூரில் இருந்து பெருந்துறைக்கு வேலைக்கு செல்பவர்கள் பவானி அல்லது கவுந்தப்பாடி சென்று அங்கிருந்து பஸ்கள் மாறி செல்ல வேண்டியநிலை ஏற்படுகிறது. அங்கிருந்தும் குறிப்பிட்ட நேரம் மட்டும் பஸ்கள் இயக்கப்பட்டு வருகின்றன. இதனால் நீண்ட நேரம் காத்திருந்து பயணம் செய்ய வேண்டி உள்ளது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் அந்தியூரில் இருந்து பெருந்துறைக்கு பஸ்கள் இயக்க நடவடிக்கை எடுக்க முன்வர வேண்டும்.

மேலும் செய்திகள்

பஸ் வசதி