அந்தியூரில் இருந்து சத்தியமங்கலத்துக்கு காலை 7.35 மணிக்கு தனியார் பஸ் இயக்கப்படுகிறது. அதன்பின்னர் சத்தியமங்கலம் செல்ல பஸ் வசதி இல்லை. இதனால் அந்தியூரில் இருந்து கோபி சென்று அங்கிருந்து சத்தியமங்கலத்துக்கு பஸ் மாறி செல்ல வேண்டியுள்ளது. இதனால் காலவிரயம் மற்றும் பண விரயம் ஏற்படுகிறது. எனவே பயணிகளின் நலன்கருதி காலை 8.40 மணிக்கு அந்தியூர் - சத்தியமங்கலம் இடையே அரசு பஸ் இயக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கப்படுமா?