சிவகங்கை மாவட்டம் காரைக்குடி நகர் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் காலை மற்றும் மாலை நேரங்களில் போக்குவரத்து நெரிசல் அதிகமாக காணப்படுகிறது. இதனால் பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகள் மற்றும் வேலைக்கு செல்வோர் குறித்த நேரத்திற்குள் செல்ல முடியாமல் சிரமப்படுகின்றனர். எனவே போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படுமா?