அரியலூர் மார்க்கெட் தெருவில் சாலையோரங்களில் அதிகமான ஆக்கிரமிப்புகள் உள்ளதால் இருசக்கர வாகனங்களில் செல்பவர்களும், நடந்து செல்பவர்களும் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளனர். கடைகளுக்கு சென்று பொருட்களை வாங்குவதற்கு தங்களது வாகனங்களை நிறுத்த முடியாமல் சிரமப்படுகின்றனர். அனைத்து கடைகளுக்கும் முன்பும் தற்காலிக கடைகள் வைக்கப்பட்டுள்ளன. நெடுஞ்சாலை துறைக்கு சொந்தமான இந்த சாலையில் சுமார் 8 ஆண்டுகளுக்கு முன்பு ஆக்கிரமிப்புகள் எடுக்கப்பட்டன. அதன் பிறகு எந்த பணியும் நடைபெறவில்லை. தற்போது பஸ்கள் வந்து செல்வதற்கு மிகவும் சிரமமான சூழ்நிலை உள்ளது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுத்து ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.